[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு

பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

economic-crime-bill-president-approve

பொருளாதார குற்றங்கள் செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்புபவர்களை பிடிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முன்னதாக இம்மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தன. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மசோதா சட்டமாக மாறியுள்ளது. 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகும் தொழிலதிபர்களை மீட்டு வந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசின் இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது. வெளிநாட்டுக்கு தப்பிய தொழிலதிபர்களின் சொத்துகளையும் பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்து, அதில் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் பொருளாதாரக் குற்றவாளிகள் தடுப்பு சட்டம் வழிவகுக்கிறது. 

இச்சட்டம் மூலம் இனி பொருளாதார குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு தப்புவது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தள்ளது. விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் அடைவதால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் புதிய சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close