[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

சகதியில் ஓர் ஜாலி ஆட்டம்: கிகி சேலஞ்ச் ஹீரோக்களுக்கு சினிமா வாய்ப்பு!

few-producers-have-expressed-interest-to-give-chance-to-kiki-farmers-in-their-films

வயல்காட்டுக்குள் சகதியில் நடனமாடிய தெலங்கானா இளைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை வெளியிட்டார். இதில், 'இன் மை பீலிங்ஸ்' என்ற பாடலில் இரவு நேரத்தில் பிஸியான சாலையில் நடனமாடுகிறார் டிராக்கி. இந்தப் பாடல் பிரபலமானது. இதையடுத்து ’கிகி ஐ லவ்யூ’ என்ற பாடல் வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்கிற, கிகி சவால் பிரபலமானது.

 இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித் துள்ளது. பிரபல நடிகை ரெஜினா ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோ‌வை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் வித்தியாசமான முறையில் கிகி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு மாடுகள் உழுவதற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறது. லம்பாடிபள்ளி பகுதியைச் சேர்ந்த கீலா அனில் குமார் மற்றும் பில்லி திருப்பதி ஆகிய இரண்டு இளம் விவசாயிகள் அந்த மாடுகளை லேசாக தட்டிவிட அவை உழத் தொடங்குகின்றன. மாடுகள் உழும் போதே அவர்கள் அதனுடன் கிகி நடனமாடுகிறார்கள். அவர்கள் நடனமாடும் போது ஆடைகள் முழுவதும் சகதி ஆகிறது. இறுதியில் தனது வேஷ்டியையும் கழட்டி ஒரு விவசாயி நடனமாடுகிறார். சேரும், சகதியுமாக உள்ள நிலத்தில் அவர்கள் வித்தியாசமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த வீடியோ ஹிட்டானதால், பிறந்து 21 நாளே ஆன தனது மகனுக்கு கிகி என்று பெயர் வைத்திருக்கிறார் பில்லி திருப்பதி. இந்நிலையில் இந்த அனிலுக்கும் திருப்பதிக்கும் சில டிவி சேனல்கள் வேலை வாய்ப்பளிக்க முன் வந்துள்ளன. சில தயாரிப்பாளர்கள் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பளிக்கவும் முன் வந்துள்ளன. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close