[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நடத்துனரின் மகள் ஒருவர் ஆத்திரத்தில் ஐபிஎஸ் ஆன கதை..

a-bus-conductor-daughter-become-a-ips

பேருந்து நடத்தினரின் மகளானா ஷாலினி, தனது சிறுவயதில் ஏற்பட்ட நிகழ்வின் தாக்கத்தால் ஐபிஎஸ் ஆகியுள்ளார்.

சில பேருக்கு வாழ்வில் சிலர் சொல்லும் கோபமான வார்த்தைகள் மன வருத்தத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த சிறுமிக்கு அது ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாதல் கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 1989ஆம் ஆண்டு பிறந்த இவர், சிறுவயதில் தனது தாயுடன் ஒரு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது ஷாலினியும், அவரது தாயாரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களது இருக்கையின் தலைப்பகுதியில் ஒரு நபர் கையை வைத்துள்ளார். ஷாலினியின் தாயார் கையை எடுக்கங்கள் என சில முறை கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அந்த நபர், “நீங்கள் என்ன பெரிய துணை ஆணையரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வார்த்தை சிறுமி ஷாலினியின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 

அந்த நிமிடத்தில் ஷாலினி ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார். அவரது தந்தை பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். இருப்பினும் ஷாலினியின் ஆசையை நிறைவேற்ற, அந்த ஏழைத் தந்தை தனது மகளை சிறுவயது முதலே தயார் செய்து வந்துள்ளார். விடா முயற்சியுடன் படித்து வந்த அப்பெண், ஐபிஎஸ் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். தற்போது ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாகவும் பணியில் சேர்ந்துவிட்டார்.
 
இதுதொடர்பாக பேசிய ஷாலினி, “நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்காக தொடர்ந்து உழையுங்கள். அனைத்து கனவுகளும் நிறைவேறும்” எனத் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close