[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைப்பு: மாந்த்ரீகம் காரணமா?

bodies-of-4-family-members-found-stacked-in-pit-behind-kerala-house

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவர் மனைவி சுசிலா (50). இவர்களது மகள் அர்ஷா (21). மகன் அர்ஜுன் (19).  இதில் கிருஷ்ணனும் அவர் மனைவியும் அக்கம் பக்கம் யாரிடமும் பேசமாட்டார்களாம். ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு தனியாக இருப்பார்களாம். கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில நாட்களாக வரவில்லை. அவரது வீட்டில் உள்ளவ ர்களையும் காணவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது உறவினர்களும் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது தரையிலும் சுவரில் ரத்தக்கறை இருந்ததை கண்டனர். பின்னர் அங்கு ரத்தக் கறை படிந்த சுத்தியல் ஒன்றை கண்டுபிடித்தனர். அதைக் கைப்பற்றிய போலீசார், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். ஒரு குழியில் புதிதாக மண் மூடப் பட்டிருப்பது தெரிந்தது.  சந்தேகமடைந்த அவர்கள் அதைத் தோண்டினர். அப்போது கிருஷ்ணனின் உடல் கிடைத்தது. அதற்கு கீழே அவர் மனைவி உடலும் அதன் கீழ் மகள், அதற்கு கீழ் மகன் ஆகியோர் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல கிடந்தது.

கிருஷ்ணனின் முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. சுசிலா நெஞ்சில் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். அவர்களின் உடல்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சுத்தியலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மாந்த்ரீகம் காரணமாக இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இவர்கள் கொல்லப்பட்டு புகைப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள போலீசார், இது பற்றி விசாரிக்க தனிப்படையை அமைத்து ள்ளனர். 

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close