[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்

தேர்தலில் தலையிட முயன்றால் பொறுக்கமாட்டோம்-  மத்திய அமைச்சர் எச்சரிக்கை

ravi-shankar-prasad-says-social-media-platforms-should-use-technology-to-weed-out-fake-news

இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றால் அதை அரசு பொறுத்துக்கொள்ளாது என மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். 

ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா போன்ற நிறுவனங்களை சுட்டிக்காட்டி மக்களவையில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றால் அதை அரசு பொறுத்துக்கொள்ளாது என்றார். மேலும் 
குற்றங்களை தூண்டும் வகையிலான போலியான செய்திகள் பரவுவதை சமூக ஊடகங்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் இதற்காக அவை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

உள்நோக்கத்துடன் கூடிய போலி தகவல் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல என்ற அமைச்சர் இதை சமூக ஊடக நிர்வாகங்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close