[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

வீட்டை எட்டிப் பார்த்த பள்ளிக் குழந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி ! கொலையா தற்கொலையா ?

7-suicide-in-one-family-in-ranchi

ராஞ்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் வீட்டில் இறந்து கிடந்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் தீபக் குமார் ஷா. தனது சகோதரர், பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன்
வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள 7 பேரும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி தரும் வகையில் இறந்து
கிடந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தீபக் வீட்டின் உரிமையாளரான மிஸ்ரா கூறும்போது, “ தீபக் தனிப்பட்ட முறையில் பிசினஸ் செய்து வந்தார்.
இதில் அவருக்கு கடன் ஏற்பட்டிருக்கலாம். சமீபத்தில் அவர் கடன் தொல்லையில் இருந்தார் என்பது உண்மை. அவரது
சகோதரருக்கும் வேலை இல்லை. மற்றவர்கள் அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில்தான் இருந்தனர்” என தெரிவித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 7 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். இருந்தாலும் கொலையாஎன்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

தீபக்கின் மகள் வழக்கமாக பள்ளி வேனில் செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் குழந்தையை அழைத்து செல்ல வந்த பள்ளி
வேன் நீண்ட நேரமாக ஒலி எழுப்பியிருக்கியது. அப்போது வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதனையடுத்து பள்ளி வேனில்
இருந்த குழந்தை ஒன்று வெளியே வந்து தீபக் ஷாவின் வீட்டை எட்டி பார்த்துள்ளது. அப்போது வீட்டில் அனைவரும் இறந்து
கிடந்ததை கண்டுள்ளது. இதன்மூலமே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. போலீசார் வீட்டிற்கு சென்றபோது, தீபக்கும்
அவரது சகோதரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் பெட்டில் பிணமாக
கிடந்துள்ளனர். இதில் தீபக்கின் இரண்டு குழந்தைகளும் அடங்கும். இருந்தாலும் தற்கொலை கடிதம் ஏதையும் போலீசார்
கைப்பற்றவில்லை.

சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் மரணமடைந்து கிடந்தனர். மூடநம்பிக்கையால் இவர்கள்
தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. மிகவும் பரபரப்பாக இந்த சம்பவம் பேசப்பட்ட நிலையில், தற்போது ராஞ்சியிலும்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close