[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

'காலையில் எழுந்ததும் உடம்பெல்லாம் வலிக்கும்' பாதிக்கப்பட்ட சிறுமி திடுக் பேட்டி

bihar-shelter-home-case-we-used-to-cut-ourselves-to-avoid-sexual-abuse

மும்பையை சேர்ந்த டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் பீகாரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் தணிக்கை மேற்கொண்டது. அப்போது முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளதாக அறிக்கை சமர் பித்தது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தக் காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். முதலில் 29 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் அனைவரும் மாத கணக்காகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிக்கை கூறியது. 

(இதையும் படிக்கலாம் 'போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை' பீகார் சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம் !)

இந்நிலையில் மேலும் 5 சிறுமிகளின் மருத்துவ அறிக்கை இன்று வெளியானது. அதில் அவர்களும் மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து மாணவிகளுமே பாலியல் வன்கொடுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.பீகார் விடுதியில் இருப்பவர்களாலும் அங்கு வருகை தந்தவர்களாலும் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதையறிந்த நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டினர். எலும்புக் கூடுகள் ஏதும் சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மாநில பெண்கள் ஆணைய தலைவி தில்மானி மிஸ்ரா கூறும்போது, ‘பாட்னா மருத்துவமனையில் சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள். ஆனால், மனரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருந்து மீள்வதற்கு நாட்கள் ஆகலாம். பாலியல் வன்கொடுமையை எதிர்த்த சிறுமிகளை பலமாகத் தாக்கியுள்ளனர். அவர்களை பட்டினி ப் போட்டுள்ளனர். சூடு வைத்துள்ளனர். காலணியால் அடித்துள்ளனர். ஒரு சிறுமியை அடித்தே கொன்று உடலை எங்கோ வீசியுள்ளனர். மற்றொரு சிறுமி, கண்ணாடி ஜன்னலை உடைத்து கையை கீறி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால் தப்பித்துவிட்டார். அவர் கையில் இன்னும் காயம் இருக்கிறது. காப்பகத்தை, அதிகாரிகள் பார்வையிட வரும்போது, சிறுமிகள் யாரும் புகார் தெரிவித்துவிடக் கூடாது என்ப தற்காக, அவர்கள் அருகிலேயே நின்றுள்ளனர். அவர்களின் துன்புறுத்தலுக்கு பயந்து எந்த புகாரையும் சிறுமிகள் சொன்னதில்லை. இது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட மற்றொரு 10 வயது சிறுமி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் "விடுதியில் எங்களுக்கு உணவு கொடுக்கும் பெண் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுப்பார். பின்பு, விடுதியின் தலைவர் பிரஜேஷ் சாரின் அறையில் படுக்க சொல்வார். காலையில் நான் கண் விழித்து பார்க்கும்போது என் உடைகள் கலைந்திருக்கும். இப்படிதான் தினமும் எங்களுக்கு உணவு கொடுக்கப்படும். பின்பு, தூங்கி எழுந்ததும் என் உடல் முழுவதும் வலி இருக்கும்."

இதேபோல இன்னொரு சிறுமி "எங்களை பிரஜேஷ் சார் அவர் அலுவலக அறைக்கு கூட்டிச் சென்று அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்துவார்" என கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்த விடுதியில் 470 சிறுமிகள் தங்கி வெளியே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close