[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

குழந்தைகள் பட்டினிச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்!

father-gave

கிழக்கு டெல்லியில் மூன்று குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மண்டாவலி பகுதியில் வசித்து வந்த 3 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்களை அங்கிருந்தவர்கள் சிலர், லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டதாகத் தெரிவித் தனர். மூன்று குழந்தைகளும் பட்டினியால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசார ணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டது. 

கிழக்கு டெல்லியை சேர்ந்தவர் மங்கள் சிங். ரிக்‌ஷா ஓட்டுநர். இவர் மதுபோதைக்கு அடிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது குழந்தைள் தான், உயிரிழந்த மான்சி (8), பாரோ (6) மற்றும் சுகோ (2). இந்தக் குழந்தைகளின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர். வாடகை கொடுக்க இயலாத இந்தக் குடும்பம், சாலைக்கு ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் வசித்து வந்துள்ளது. தாய்க்கு மனநிலை சரியில்லாததால், குழந்தைகளை அவரால் கவனிக்க முடியவில்லை. தந்தையோ மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இருப்பினும் தனது குழந்தைகளுக்கு ரிக்‌ஷா ஓட்டி சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது ரிக்‌ஷா திருடு போயுள்ளது. இதனால் மேலும் குடிக்க ஆரம்பித்த மங்கள், வேலை தேடி ஒடிசா மாநிலத்துக்குச் சென்றுள் ளார். அங்கு சென்ற அவர் திரும்பவில்லை. தாயும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், குழந்தைகளை கவனிக்க யாருமில்லை. உணவின்றி வாடி வந்த குழந்தைகள், பல நாட்கள் பசியால் அழுதே பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இதன்பின்னர் குழந்தைகளை கண்ட அப்பகுதியினர் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மூன்று குழந்தைகளும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். கடந்த 23-ம் தேதி குழந்தைகளின் தந்தை மங்கள், ஏதோ பெயர் தெரியாத மருத்து ஒன்றை சுடு தண்ணீரில் கலக்கி கொடுத்துள்ளார். அதைக் குடித்தபின் குழந்தைகள் வாமிட் எடுத்துள்ளன. பின்னர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மயங்கிய குழந்தைகள் 24ம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து. குழந்தைகள் இருந்த பகுதியில் பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதுதான் அந்த மருந்து பாட்டிலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதனால் குழந்தைகள் பட்டினியால் இறக்கவில்லை என்றால் பெற்ற தந்தையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிவிட்ட மங்கள் சிங்கை தேடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close