[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில், மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
  • BREAKING-NEWS ஆளுநர்-முதலமைச்சர் இடையேயான பிரச்னையை தீர்த்து புதுச்சேரியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடிதம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் - ராஜீவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்)
  • BREAKING-NEWS கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

'போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை' பீகார் சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம் !

girls-were-burnt-cut-and-drugged-daily-before-rape-in-bihar-shelter-survivors-trying-to-commit-suicide

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்தது. பீகார் விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதனையறிந்த விடுதி நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களும் இப்போது வெளியாகியுள்ளது. இதில் தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு முன்பு, "எங்களது உடலில் தீக்காயங்களை ஏற்படுத்துவார்கள். பி்ன்பு கத்தியால் காயப்படுத்துவார்கள். இதற்கு அடுத்தக்கட்டமாக போதை மருந்துகளை தினமும் கொடுப்பார்கள். ஒரு நாள் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். போதை மருந்து கொடுத்த பின்பு பாலியல் வன்கொடுமை செய்வார்கள். இதனால் நாங்கள் பல முறை தற்கொலைக்கு முயன்றோம்" என பாதி்க்கப்பட்ட சிறுமிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.

இப்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமிகளுக்கு உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் மீதமுள்ள சிறுமிகள் குறித்தும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரவுள்ளது. இதனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறுமிகளின் பட்டியல் அதிகரிக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் முசாபர்பூரில் உள்ள இல்லத்தில் ஏற்கெனவே இருந்தவர்களின் விவரமும் கேட்டக்கப்பட்டுள்ளதாக இவ்வழக்கை விசாரணை செய்யும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பபமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தப் பணிகள் எக்ஸிக்யூடிவ் மேஜிஸ்ட்ரேட் ப்ரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் இந்தப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், விடுதியின் சிறுமி கூறியதை அடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : GirlBurntCutDruggedBiharShelterSurvivorsRapeMurderMuzaafurpur
Advertisement:
Advertisement:
[X] Close