[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

இன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள்

today-was-kargil-war-memorial-day-army-man-s-celebrate

கார்கில் வெற்றி தினத்தை ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இந்நாளை, வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்‌தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close