[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகப்பட்ச வரி செலுத்தியவர் யார் தெரியுமா..?

who-s-the-highest-taxpayer-in-andhra-and-telangana

கடந்த ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியது தெரியவந்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இந்தாண்டு ஜூலை 31 கடைசி நாளாகும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் பலரும் வருமான வரியினை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியவர்களின் விவரங்களை ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியிட்டுள்ளது. அதன்படி ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியது தெரியவந்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் மொத்தமாக 9 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். அவரின் மொத்த ஆண்டு வருமானம் 30 கோடி ஆகும். அதில் 30 சதவீதத்தை அவர் வருமான வரியாக செலுத்தியுள்ளார். ஆனாலும் அவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

(கோப்பு புகைப்படம்)

ஹைதராபாத் பகுதியை பொருத்தவரை அவர் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியிருந்தாலும் கூட ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவரை விட பலரும் அதிகப்பட்ச வருமான வரி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 7.41 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். பின்னர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை கடந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

Courtesy: TheNewsMinute

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close