[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

சிக்கலானது சினிமா ஸ்டைல் முயற்சி: ஹீரோ ஆக ஆசைப்பட்டு ஜீரோவான காதலன்!

jail-for-hiring-staged-goons-to-assault-dad-of-girlfriend

சினிமா கற்பனையை நிஜமாக்க ஆசைப்பட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் காதலன் ஒருவர்!

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ் (21). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது காதல்.  சொன்னார் ரூபேஸ். ஏற்றுக்கொண்டார் உமா. ஆனால் ’கல்யாண விஷயத்தில் எங்கப்பா என்ன சொல்றாரோ அதைதான் கேட்பேன்’ என்றார் உமா. ’அதை கல்யாண நேரத்துல பார்த்துக்கலாம்’ என்று ரூபேஸ் சொல்ல, பிறகு காதலிக்கத் தொடங்கினர். பார்க், பீச், ஷாப்பிங் மால் என சுற்றிச்சுற்றி காதல் செய்த இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால், உமா, அப்பா சம்மதிக்கணுமே’ என்றார். உமாவின்  தந்தை ஜோதிடர். 

வீட்டுக்கு வந்த ரூபேஸ், காதலியின் அப்பாவை எப்படி கவர் பண்ணலாம் என்று அப்படியும் இப்படியுமாக யோசித்துப் பார்த்தார். எப்படி யோசித் தாலும் புதிதாக அவருக்கு எதுவும் தோன்றவில்லை. பிறகு சினிமாவில் வரும் பழைய ஐடியாதான் அவருக்கு ஓகே எனப்பட்டது. ஐடியா பழசா னாலும் இது ஒர்க் அவுட் ஆகும் என்று நம்பினார். அதாவது காதலியின் அப்பா அலுவலகம் செல்லும் இடத்தில் அவரை மறித்து வில்லன்கள் அடிக்கவேண்டும். அந்த இடத்தில் ரூபேஸ் ஹீரோ போல என்ட்ரியாகி, அவரைக் காப்பாற்ற வேண்டும். இதில் அவர் இம்ப்ரஸ் ஆவார். பிறகு அப்படியே பழகி, ’நான் உங்க மகளை லவ் பண்றேன்’ என்று சொல்ல வேண்டும் என்பது திட்டம்!

அதன்படி அப்பாஸ் ஷேக் என்பவரை ஏற்பாடு செய்தார் ரூபேஸ். திட்டத்தைச் சொன்னார். அவரும் ’நான் நல்லா அடிக்கவும் செய்வேன், நடிக்கவும் செய்வேன்’ என்றார். பிளான்படி கடந்த 19 ஆம் தேதி, அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள டிஎன் நகர் மாநகர பள்ளி அருகே, சம்பவத்தை அரங்கேற்றினார்கள். அதிக ஆசைப்பிடித்த ஷேக் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணி, அவரது ஃபோனை பறித்துக்கொண்டார். அதே போல ரூபேஸ் என்ட்ரியாகி, காதலியின் அப்பாவைக் ’காப்பாற்றி’ வீட்டில் விட்டார்.

பிளானில் முக்கால்வாசி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. இனி, கல்யாணம் கன்பர்ம் என்று நினைத்தார் ரூபேஸ். இப்போதுதான் இன்னொரு வடிவில் வில்லத்தனம் முளைத்தது. அதாவது, ஷேக், ‘இங்க பாரு, உன் மேட்டரை உங்க மாமனாரிடமும் காதலியிடமும் சொன்னால் கதை அவ்வள வுதான். சொல்லாம இருக்கணும்னா, எனக்கு 90 ஆயிரம் ரூபா கொடுக்கணும்’ என்று மிரட்டியுள்ளான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடுப்பான ரூபேஸ், ஷேக் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஷேக்கை கைது செய்து விசாரித்ததும் மேலே உள்ள தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.

பிறகென்ன, ஷேக்கிடம் இருந்து போனை மீட்ட போலீசார் காதலியின் அப்பாவிடம் கொடுத்தனர். ஷேக்கை உள்ளே தள்ளிய அவர்கள், இப்படி யொரு மோசடி திட்டத்தை அரங்கேற்றிய ரூபேஸையும் சிறையில் அடைத்துவிட்டனர்.

இவ்வளவு ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு என்பது மாதிரி, ‘என் மகள் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீங்க சிறையில இருந் து வந்ததும் உங்க கல்யாணத்துக்கு தேதி குறிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் மாமனார்! குளிர்ந்து போயிருக்கிறார் ரூபேஸ்!
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close