உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து உத்தரகண்டில் மீண்டும் முதலமைச்சராக ஹரீஷ் ராவத் பொறுப்பேற்பார்.