[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்தில் இளம் பெண் எரித்துக்கொலை!

woman-gangraped-burnt-alive-inside-temple-premises-in-up-s-sambhal

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கோயில் வளாகத்துக்குள் இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ளது மொராதாபாத். அதன் அருகில் உள்ள ராஜ்புராவில் 35 வயது பெண் ஒருவர் தனது மகளு டன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது உறவினர்களான ஐந்து பேர் வந்தனர். சொந்தக்காரர்கள்தானே என்று நம்பிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணை ’சொந்தக்காரர்கள்’ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி, கதறியும் கேட்காமல் இப்படி செய்துவிட்டு வெளியே ஓடிவிட்டனர்.

இதை வெளியூரில் வேலைக்கு சென்றிருந்த தனது கணவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று போன் செய்தார் அந்தப் பெண். ரீச் ஆகவில்லை. பின்னர் அவசர போலீஸ் ’100’-க்கு போன் செய்தார். அவர்கள் போனை எடுக்கவே இல்லையாம்.

அதற்குள் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், இதை வெளியே சொல்லிவிட்டால் தங்களுக்கு சிக்கலாகிவிடுமோ என்று பயந்து, அந்தப் பெண்ணை கொன்று விடுவது என்று முடிவு செய்தது. அதன்படி மண் எண்ணெய் வாங்கிக்கொண்டு அந்த வீட்டுக்கு வந்தது. அந்தப் பெண்ணை, அருகில் உள்ள கோயிலுக்கு தரதரவென்று இழுத்து சென்றது. அங்கு யாகம் வளர்ப்பதற்கான இடத்தில் இருக்கும் அக்னிகுண்டத்துக்குள் அந்தப் பெண்ணை தள்ளி, மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்தனர். அவர் கதறல் சத்தம் அங்கு யாருக்கும் கேட்கவில்லை. உயிரோடு கொளுத்தப்பட்ட அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கும் அவர் கணவருக்கும் தெரிவித்தனர். கணவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் கூறும்போது, ‘குற்றவாளிகளை பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறோம். 100-க்கு அந்த பெண் போன் செய்தது குறித்தும் அதை யாரும் எடுக்காமல் இருந்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

கோயில் வளாகத்துக்குள் உறவினர்களாலேயே இளம் பெண் எரிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close