[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

கழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..!

different-type-of-marriage-video

திருமணத்திற்காக ஜோடிகள் செயற்கையான கழுகில் வானில் இருந்து பறந்து வந்த வீடியோ இணையதளங்களை கலக்கி வருகிறது.

பொதுவாக இந்தியர்களின் திருமணம் என்றால் ஆடம்பரம் அதிகம் இருக்கும். தங்களது செல்வாக்கை பலர் முன்னிலையில் நிரூபித்து காட்டும் வகையில் பலரும் அதனை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு பல சிறப்பான மெனக்கெடலையும் மேற்கொள்கின்றனர். ஒரு காலத்தில் திருமணத்திற்காக மாப்பிள்ளைகள் குதிரை வண்டியில் வந்தனர். அது ஓய்ந்து தற்போது ஆடம்பர கார்களில் வருகின்றனர். சில பெண்களோ, திருமணத்தின் போது தங்களது துணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்து இறங்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதுபோன்று நடைபெற்ற திருமண வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

வீடியோவில், செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகு ஒன்றில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும்போது இதமான பழைய ஹிந்தி பாடலும் இசைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வான வேடிக்கைளுக்கும் பஞ்சமில்லை. எல்லோரும் காத்திருந்த நேரத்தில் ஜோடிகள் பறந்து வந்தது பலரையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்தது. இதுபோன்ற சம்பவங்கள் சற்று ஆபத்திற்குரியதுதான். ஆனால் மணமக்கள் தங்களது திருமணத்தை சற்று வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்து வந்திருக்கலாம் என தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் எந்த மாநிலத்தில் இதுபோன்ற திருமணம் நடைபெற்றது என தெரியவில்லை.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close