[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

நள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்!

bhopal-model-held-hostage-by-stalker-says-agreed-to-marriage-under-threat

இளம் மாடலை வீட்டுக்குள்  சிறைவைத்து, துப்பாக்கியால் மிரட்டி காதலிப்பதாக, பத்திரத்தில் எழுதி வாங்கிய முரட்டு காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார், இளம் மாடல் ஒருவர். இவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் வந்தார். துப்பாக்கி முனையில் மாடலின் பெற்றோரை ஓர் அறையிலும் மற்றொரு அறையில் மாடலையும் சிறை வைத்தார். மாடலை அடித்து துன்புறுத்தினார். கத்தியால் குத்தினார். இதனால் அவருக்கு ரத்தம் வழிந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். உள்ளே வந்தால் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார் இளைஞர். பின்னர் அணுகுமுறையை மாற்றிய போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.


அப்போது அந்த இளைஞர், ‘என் பெயர் ரோகித் என்கிற ரீகல் சிங். அவரும் (மாடல்) நானும் மும்பையில் வசித்தபோது காதலித்தோம். போபால் வந்தபின் என் காதலை நிராகரிக்கிறார். அவர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம். அவர் என்னை காதலிக்க வேண்டும். அதை பத்திரத்தில் எழுதித் தரவேண்டும். இல்லையென்றால் விட மாட்டேன்’ என்று தெரிவித்தார். இது காதல் பஞ்சாயத்து என்பதைப் புரிந்து கொண்ட போலீசார், பிறகு அவருக்கு உதவுவதாகக் கூறினர். அவர் தனக்கு ஃபோன் சார்ஜர், உணவு, தண்ணீர், பத்திரம் ஆகியவற்றைக் கேட்டார். அதனை கொடுத்தார்கள்.

நள்ளிரவு வரை நடந்த இந்தப் போராட்டம் பின் முடிவுக்கு வந்தது. வீட்டின் ஜன்னலில் இருந்து வெற்றிச் சின்னத்தைக் காண்பித்தார் ரோகித். காதலுக்கும் கல்யாணத்துக்கும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் அது பற்றி முத்திரைத்தாளில் எழுதிய வாங்கியதாகவும் கூறினார். பின் கதவைத் திறந்தார்.  போலீசாரும் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் உள்ளே சென்று அந்தப் பெண்ணை பார்த்தனர். மாடலின் உடலில் ரத்தக் காயம் இருந்தது. ரோகித்தின் கைகளிலும் ரத்தம் வழிந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். காதலும் காதலியும் கிடைத்த மகிழ்ச்சியில் ரோகித் இருக்க, திடீரென்று மாஜிஸ்திரேட்டிடம் கண்ணீர் விட்டு கதறினார், அந்த மாடல்.

‘என்னை எப்படியாவது காப்பாத்துங்க. வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க, காதலிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டேன். அதைத் தவிர வேறு வழியில்லை. அவனை எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அவனை காதலிக்கவும் இல்லை’ என்று மாஜிஸ்திரேட் முன் கண்ணிர் மல்கக் கூறியுள்ளார் மாடல். 

போலீசார் ரோகித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close