[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து

நாட்டு மக்களை கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி

setting-up-a-social-media-hub-is-like-creating-a-surveillance-state-supreme-court

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஈமெயில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் சமூக ஊடக மையம் ஒன்றினை மத்திய அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏஎம்.கன்வில்கர், சந்திரசத் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மொய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, சமூக வலைத்தளங்களில் இருக்கும் தகவல்களை சமூக ஊடக மையத்தின் மூலம் மத்திய அரசு கண்காணிக்க விரும்புகிறது என்று கூறினார். மேலும், ‘சமூக ஊடக மையம் அமைப்பதற்கான மென்பொருள் உருவாக்கித்தரும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது. டெண்டர் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்குகிறது’ என்றார் சிங்வி.

மனுவை விசாரித்த நீதிபதிகள், “பொதுமக்களின் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் மீது தனது கட்டுப்பாட்டை செலுத்த மத்திய அரசு விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்பியதோடு, “சமூக ஊடக மையத்தின் மூலம் ஒட்டுமொத்த நாட்டினை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதை போல் தோற்றம் அளிக்கிறது” என்று கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளித்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close