[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

கெளரவம் என நினைத்து சிறுமியை கொன்ற குடும்பம்: உண்மையை வெளியே கொண்டுவந்த பாசத் தாய்..!

my-family-killed-her-for-loving-a-man-from-lower-caste-karnataka-teen-s-mother

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் தனது மகள் சென்றதால், அதனை வெட்கக்கேடு என கருதிய தந்தையும், பாட்டியும் அவரை கொன்றுவிட்டு நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொல்லப்பட்ட  கர்நாடகாவை சேர்ந்த சிறுமியின் தாயாரன புஷ்பா கூறும்போது, “ என் மகள் சந்தியா முன்பெல்லாம் எப்போதும் கலகலவென்று சந்தாஷமாக இருக்கக்கூடியவள். ஆனால் அவளுக்கு ஒரு காதல் இருந்தது. அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு நபருடன். ஆனால் அந்த காதலுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடன்பாடில்லை. இதனால் அவள் சோகமாகவே இருந்து வந்தாள். கடந்து ஜூன் 25-ஆம் தேதி என் மகளும் அவளின் பாட்டியும் அதாவது என் மாமியாரும் எங்கள் வீட்டில் இருந்தனர். என் கணவருக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் நானும் அவரும் மருத்துவமனைக்கு சென்றோம். இரவு முழுக்க அங்கேயே தங்க நேரிட்டதால் வீட்டிற்கு வர முடியவில்லை. அடுத்த நாள் 11 மணி வரை அங்குதான் இருந்தோம். அப்போதுதான் திடீரென என் மாமியாரிடம் இருந்து என் கணவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதாவது என் மகள் சந்தியா தற்கொலை செய்துவிட்டாள் என்பதுதான் அது.

என் மனம் இடிந்து நொறுங்கியது போல உணர்ந்தேன். உடனே நான் என் கணவரும் அவசரம் அவசரமாக வீட்டிற்கு சென்றோம். அங்கே வீட்டின் முதல் அறையில் என் மகள் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். பூச்சிக்கொல்லி மருந்து நாற்றம் அவளை சுற்றிலும் வீசியது. நாக்கு வெளியே தள்ளப்பட்டிருந்தது. கழுத்து பக்கம் சிறிய இரத்த தடயங்களும் இருந்தன.  “காலையில் எழுந்து பார்த்தேன். பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தாள்” என என் மாமியார் என்னிடம் நடந்தவற்றை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் என் மாமியார் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை. உடனே போலீசாருக்கு தகவல் தெவித்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் மகளுக்கும் எங்கள் ஊருக்கு அருகே உள்ள ஊரில் வசிக்கும் பிரவீன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும் காதல் இருந்தது. அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி பிரவீனுடன் சென்றுவிட்டார். நாங்கள் எங்கள் மகளை பிரவீன் கடத்தி சென்றுவிட்டார் என காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அதன்பேரில் போலீசார் பிரவீனை கைது செய்தனர். பிரவீன் கைது செய்யப்பட்ட நாளிலேயே எங்கள் மகள் சந்தியா எங்கள் வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். நாங்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினோம். பின்னர் அதிலிருந்து அவர் வெளியே வந்தாலும் சிறிய சோகத்துடன்தான் காணப்பட்டார்” என்றார்.

இதனிடையே போலீசார் சந்தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. சந்தியாவுடன் இருந்தது அவரின் பாட்டி மட்டுமே. எனவே போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவர் சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சந்தியாவின் தாயான புஷ்பா மேலும் கூறும்போது, “ நாங்கள் மருத்துவமனையில் இருந்த அன்றைய தினம் இரவு, என் மாமியார் என் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். சந்தியா மீண்டும் தற்கொலை குறித்து பேசுவதாக அவர் என் கணவரிடம் தெரிவித்திருக்கிறார். அப்போது என் கணவரோ, ஏற்கெனவே ஓடிப்போனதால் வீட்டிற்கே தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக என் மாமியாரிடம் தெரிவித்ததோடு மகளை கொலை செய்யும்படியும் கூறியிருக்கிறார். அதன்படி என் மாமியார் என் மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பாத்ரூமில் இழுத்துச் சென்று போட்டுள்ளார். பின்னர் தற்கொலை நாடகம் ஆட வாயில் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஊற்றியுள்ளார். போலீசார் விசாரணையில் இதனை கண்டுபிடித்துவிட்டனர்” என்றார். தற்போது சந்தியாவின் பாட்டி மற்றும் அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Courtesy: TheNewsMinute

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close