[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

சொன்னது போலவே நடந்தது: பிரபல தாதா சிறைக்குள் சுட்டுக் கொலை!

gangster-munna-bajrangi-shot-dead-in-uttar-pradesh-jail

பிரபல தாதா சிறைக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் முன்னா பஜ்ரங்கி. தாதாவான இவர் மீது கொலை, கொள்ளை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உட்பட ஏராளமான வழக்குள் உள்ளன. பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராய் என்பவரை கொன்றது உட்பட 40 கொலை வழக்குகள் இவர் மீது உள்ளன.

தலைமறைவாக இருந்த இவரை பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ. 7 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு, தொழிலதிபர் ஒருவரை ஒரு கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் டெல்லியில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார் பஜ்ரங்கி. பின்னர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் அங்கிருந்தே தமது தாதா வேலையை கச்சிதமாகச் செயல்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ’சிறப்பு படை போலீசார், போலி என்கவுன்டரில் என் கணவரைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர். சிறைக்குள்ளேயே அவரைத் தீர்த்துக்கட்ட சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் யோகி ஆதியாநாத் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்று பஜ்ரங்கியின் மனைவி சீமா சிங் கடந்த மாதம் 29 ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே, சிறைக்குள் பஜ்ரங்கியை இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

போலீசார் கூறும்போது, ‘பாக்பத் மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றில், பஜ்ரங்கியை இன்று ஆஜர்படுத்த வேண்டும். அதற்காக, ஜான்சி சிறையில் இருந்து பாக்பத் சிறைக்கு நேற்று இரவு 9.30 அளவில் அவரை கொண்டு வந்தோம். சுனில் ரதி என்கிற ரவுடி அடைக்கப் பட்டிருந்த செல்லில் இவரையும் அடைத்தோம். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கைதிகளுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்த போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பஜ்ரங்கியை, சுனில் சுட்டுக்கொன்றுள்ளார். இதுபற்றி விசாரித்து வருகிறோம்’ என்று கூறியுள் ளனர்.

இதையடுத்து சிறை வார்டன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதி விசாரணைக்கு  முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். ‘சிறைக்குள் நடந்த இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close