[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

the-supreme-court-today-ruled-in-the-case-of-the-medical-student-nirbhaya-gangrape-case

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கு கடந்து வந்த பாதை

2012 டிச.16: டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா‌ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

2012 டிச.29: படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் மீதான வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 6வது நபர் சிறுவன் என்பதால் அவன் மீதான வழக்கு விசாரணை சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்றது.

2013 மார்ச்13: ராம் சிங் என்ற முக்கிய குற்றவாளி திஹார் சிறையில் தற்கொலை.

2013 ஆக.13: சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

‌2013 செப்.13: மீதமுள்ள 4 பேருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2014 ஜன.3: மரண தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

2014 ஜூன் 2: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close