[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

சிறுமியிடம் தவறாக நடந்த கணவர்..! சத்தம்போட்டு ஊரைக் கூட்டிய மனைவி..!

man-try-to-rape-child-wife-caught-accused

சிறுமி ஒருவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது அவரின் மனைவி கூச்சலிட்டு ஆளைக்கூட்டிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் சாகு நேதம். திருமணமான 25 வயது இளைஞர். இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி ஒருவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட நேதம், அங்கு சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த நேரத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த அவரின் மனைவி, கணவர் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்டு சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். ஆனால் அதேசமயம் நேதம் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்று ஓடிவிட்டார்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நேதம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close