[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ரிசர்வ் வங்கி செலவிட்டது எவ்வளவு ? 

rs-29-crore-spent-on-using-air-force-to-ferry-new-notes-after-demonetisation-rti

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படைக்கு கட்டணமாக 29 கோடியே 41 லட்சம் ரூபாயை ரிசர்வ் வங்கி செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இந்திய விமானப்படை விமானம் மூலம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டன. இதற்காக விமானப்படைக்கு ரிசர்வ் வங்கி செலுத்திய கட்டணம் தொடர்பான விவரங்களை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதில் ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க ரிசர்வ் வங்கி மற்றும் பணம் அச்சடிக்கும் கழகத்துக்கு 29 கோடியே 41 லட்சம் ரூபாயை கட்டணமாக இந்திய விமானப்படை நிர்ணயித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பணமதிப்பிழப்புக்குப் பிறகு 2016-ல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி 7 ஆயிரத்து 965 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது 2015ஆம் ஆண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவழித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பால் 2016 - 2017ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருவாய் 23 புள்ளி 5 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் செலவு 107 புள்ளி 8 சதவீதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வந்துசேர்ந்தது குறிப்பிடக்கத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close