[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா!

18-year-old-rape-victim-in-high-end-gurugram-society-says-friend-s-father-had-planned-it

திட்டமிட்டு மதுகுடிக்க வைத்து உயிர்த் தோழியின் அப்பா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் புகாரில் தெரிவித்துள் ளார்.

டெல்லி அருகிலுள்ள குருகிராமைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 45. தொழிலதிபர். இவரது 18 வயது மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் குருகிராம் திரும்பியிருந்தார். அவருக்கு தனது பழைய தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஒவ்வொருவரையாக சந்தித்துப் பேசினார். இதையடுத்து தன்னுடன் பல வருடங்களாக ஒன்றாகப் படித்த உயிர் தோழி சுமதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு அழைத்தார். வந்தார் சுமதி. நலம் விசாரித்துக்கொண்ட அவர்கள் பழைய கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர். 

தோழியின் அம்மா ஊரில் இல்லாததால், ராம் அவர்களை டின்னருக்காக ’சைபர் ஹப்’புக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். சுமதி, சிறுவயதில் இருந்தே அவர் வீட்டுக்கு வந்து செல்பவர் என்பதால் ராமுக்கு நன்றாக அறிமுகமானவர். ராம் வீட்டிலேயே, தோழியின் அருகில் படுத்துத் தூங்கிவிட்டார் சுமதி. அதிகாலை 4 மணியளவில், சுமதியை யாரோ உசுப்பினார்கள். கண்ணைத் திறந்து பார்த்தால் ராம் நின்றிருந்தார். இவர் ஏன் நிற்கிறார் என்பது தெரியாமல், ஆச்சரியமாக என்ன என்று கேட்டார் சுமதி. ‘வெளியே வா பேசணும்’ என்று அழைத்தார் ராம். பின்னர் தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டினார். புரிந்துகொண்ட சுமதி, தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். அவரை மிரட்டிய ராம், போதை தெளியாமல் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின் இதை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.


இந்தச் சம்பவத்தை அடுத்து வீட்டுக்கு வந்த சுமதி, தன் அம்மாவிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவரது ஆலோசனைப்படி குருகிராம் போலீசில் புகார் கொடுத்தார் சுமதி. போலீசார், ராமிடம் விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் ராம். இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் போலீசில் சுமதி கொடுத்த வாக்குமூலத்தில், திட்டமிட்டு தன்னை அதிகமாக மதுகுடிக்க வைத்து இந்த செயலில் ராம் ஈடுபட்ட தாகத் தெரிவித்துள்ளார். 

‘என் அம்மா டின்னர் போக சம்மதித்ததே, தோழியுடன் அவர் அப்பாவும் வந்ததால்தான். அவர் வந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் சென்றேன். அங்கு சென்றதும் ஹாட் டிரிங்ஸ் குடிக்கச் சொன்னார். இதற்கு முன் மது குடித்ததில்லை. கொஞ்சமாகக் குடிக்கலாம் என்று ராம் சொன்னார். சரியென்று குடித்தேன். ஆனால், அவர் என்னை அதிகமாகக் குடிக்க வைத்தார். அவர் இந்த நோக்கத்தோடுதான் என்னை குடிக்க வைத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதிகாலையின் என்னை அழைத்துச் சென்று கதவைப் பூட்டி, என்மீது சாய்ந்தார். என்னால் அவரி டமிருந்து தப்பிக்க முடியவில்லை. பிறகு இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். நான் என் அம்மா விடம் சொன்னேன். அவர்தான் போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னார்’ என்றார்.

இதையடுத்து போலீசார் ராமை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை அவரது குடும்பத்தினர் யாரும் சந்திக்க வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close