[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

63 வயது மனைவியை கொன்ற 75 வயது முதியவர் - 11 நாட்களில் தீர்ப்பு வழங்கி நீதிபதி சாதனை

karnataka-chitradurga-judge-disposes-of-murder-case-in-11-days-75-year-old-gets-life-term

கர்நாடக மாநிலத்தில் மனைவியை கணவர் கொலை செய்த வழக்கில் 11 நாட்களில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை சித்ராதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.வஸ்திரமுத் வழங்கினார்.

சல்லகேரே பகுதியில் உள்ள வாலசே கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வர சுவாமி. இவர் தனது மனைவியின் மீது சந்தேகம் கொண்டு தொடர்ச்சியாக கொடுமைபடுத்தி வந்துள்ளார். அதேபோல், கடந்த ஜூன் 27ம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், கோபத்தில் தனது மனைவி புட்டம்மாவை பாறாங்கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார் பரமேஸ்வர். இதில் மனைவியும் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, புட்டம்மாவின் மூத்த சகோதரர் நாகபூஷன் தலுக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பரமேஸ்வரரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து, மாவட்ட நீதிபதி வஸ்திரமுத் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். ஜுலை 3 முதல் 5ம் தேதி வரை விசாரணை நடைபெற்றது. பின்னர், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட பரமேஸ்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் அவரது மகன் கிரிஷ்க்கும் ரூ5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக விரைவாக வழங்கப்பட்ட தீர்ப்பு இது ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close