[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வீடியோ வெளியிட்ட கொடூரம்..!

three-men-molest-woman-in-uttar-pradesh-s-unnao-another-man-films-it

இளம்பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் வலுக்கட்டாயமாக காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்க அரசு பலகட்ட முயற்சி எடுத்தாலும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதுதொடர்பான குற்றங்கள் குறைந்தபாடில்லை. உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவருக்கு கும்பல் ஒன்று பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், இளம்பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் தரதரவென்று வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர். அந்தப்பெண் என்னை விட்டுவிடுங்கள் என கதறியபோதும் அந்த இளைஞர்கள் இளம்பெண்ணை விடவில்லை. தொடர்ச்சியாக அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்கின்றனர். அத்தோடு அந்த இளம்பெண்ணை தாக்கவும் செய்கின்றனர். ஆனால் இந்த இளம்பெண்ணோ தயவுசெய்து என்னை விட்விடுங்கள் என தொடர்ச்சியாக கதறுகிறார். நான்காவது நிற்கும் நபர், நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்கிறார். இதனை சமூகவலைதளங்களில் வைரல் ஆக்குவோம் என்றும் அந்த இளைஞர்கள் கூறுகின்றனர். வீடியோவில் தங்களது முகத்தை மறைக்காமல், எந்தவித பயமும் கொள்ளாமல் இளைஞர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ராகுல், ஆகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி அனூப் சிங் கூறும்போது, “ இளம்பெண் ஒருவருக்கு மூன்று இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் வீடியோ எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது வீடியோவின் மூல ஆதாரத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்போது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னவ் என்ற இடத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் 9 வயது சிறுமி 25 இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒருமாதம் முடிவடைவதற்குள் அதேபகுதியில் தற்போதும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close