[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

தோனியை பற்றி இப்படியா சொன்னார்கள் ?

what-cricketers-said-about-dhoni-the-captain-cool

கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்றதும் இந்தியர்களின் நினைவுக்கு வரும் பெயர் தோனி. கேப்டன் கூல், சிக்சர் மன்னன், ஹெலிகாப்டர் ஷாட் கில்லி என பல பெயர்கள் அவருக்கு உண்டு. புகழின் உச்சம் சென்றதும், அதிகமாக விமர்சிக்கப்பட்டதும் தோனி எப்படிப்பட்டவர் என்பதைச் சொல்லும். இப்படி இருக்க, தோனியை குறித்து சக மற்றும் மற்ற நாட்டு வீரர்கள் சொன்னது என்ன தெரியுமா ? 

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒருமுறை பேசும் போது தோனி பற்றி கேட்கிறார்கள். அதற்கு “ நான் விளையாடியதிலேயே மிகச் சிறந்த ஒரு கேப்டனின் தலமையில் விளையாடி இருக்கிறேன் என்றால் அது தோனி” என்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஒருமுறை கேப்டன்களின் இரண்டு வகை உண்டு , முதல் வகை தோனி, இரண்டாம் வகை மற்ற அனைவரும் என்றார். கில்லி என்றதும் ஞாபகத்துக்கு வரும் ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில் “ மக்கள் எனக்கு தரும் பரிசு என்பது எனக்காக யாரோ ஒருவர் கிரிக்கெட்டை பார்க்கிறேன் என சொல்வது ; ஆனால் நான் விளையாடுவது எதற்காக என்றால், தோனியின் விளையாட்டை பார்ப்பதற்காக “ என்றார். சோயிப் மாலிக் கூறும் போது “ இந்தியர்கள் பலர் தோனியை வெறுக்கலாம், ஆனால் பாகிஸ்தானோ தோனி போன்ற கேப்டன் கிடைக்க மாட்டாரா என ஏங்குகிறது” என்றார்.

ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் வாகனிடம் தோனி குறித்து கூறுங்கள் என்ற போது “உலக கிரிக்கெட்டின் கூலான கேப்டன் தோனி , எப்பொழுது ஒரு தலைவன் உணர்ச்சிவயப்படாமல் , அமைதியாக ஒரு விஷயத்தை கையாளும் நிலை வருகிறதோ , அப்போது தோனி போன்று யாரும் செயல்பட முடியாது என்றார். “ நான் ஒரு இந்தியன், தோனியே எனது கேப்டன்” என்று பெருமையாக சொன்னார் சவுரவ் கங்குலி. கேரி கிறிஸ்டனிடம் தோனி குறித்து கேட்ட போது “தோனி மட்டும் என்னோடு வரத் தயாராக இருந்தால், நன போருக்கு கூட செல்வேன்” என்றார். ஸ்டீவ் வாக் எல்லோருக்கு ஒரு படி மேல் சென்று “ நான் மட்டும் ஒரு அணியை தேர்வு செய்யும் இடத்தில் சச்சினை ஓபனராகபும், தோனியை கேப்டனாகவும் தேர்வு செய்வேன்” என்றார். இதற்கிடையில் மைக் ஹஸ்ஸி தோனியோடு ஐ.பி.எல் விளையாடினார். அவரிடம் கேட்ட போது “ தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது நான் செய்த பாக்கியம் “ என்றார். இப்படி பலரையும் கவர்ந்த தோனி சீனியர்களையும் கவர்ந்த ஒருவர்

சுனில் கவாஸ்கரிடம் தோனி குறித்து கேட்ட போது “ நான் இறப்பது உறுதி செய்யப்பட்டால், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸ் அடித்ததை பார்த்து விட்டு இறக்க விரும்புகிறேன்” என்றார். இந்திய அணி மேலாளர் ரவி சாஸ்திரி கூறும் போது “ கிரிக்கெட்டில் பலரையும் நீங்கள் நினைவு கூற விரும்பினால், அந்த பட்டியல் தோனி இல்லாமல் நிறைவு பெறாது” என்றார். இப்படி பலரும் தோனி குறித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர். தோனி - ஆச்சரியத்தின் பிறப்பிடம்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close