[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இணைந்து போட்டி
  • BREAKING-NEWS இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில், மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
  • BREAKING-NEWS ஆளுநர்-முதலமைச்சர் இடையேயான பிரச்னையை தீர்த்து புதுச்சேரியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடிதம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் - ராஜீவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்)
  • BREAKING-NEWS கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!

ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்ம மரணம்.. சிசிடிவி காட்சி சிக்கியது..!

delhi-family-deaths-cctv-footage

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் ஸ்டூல்கள் மற்றும் ஒயர்களை அவர்கள் எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டிற்குள்ளேயே கோவிலை கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

எனவே மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அவைகள் தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்து வருவதால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் ஸ்டூல்கள், ஒயர்களை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. தற்கொலைக்கு அவற்றைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. முக்கிய ஆதாரமாக கருதப்படும் சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close