[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

திருநங்கைகள் நலனுக்காக முக்கிய முடிவெடுத்த கேரளா..!

kerala-government-take-good-decision-for-transgender-people

திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரிகளிலும் அவர்களுக்காக கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகளை அளவிட முடியாது. குடும்பம், சமூகத்தால் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இளம் வயதிலேயே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் கல்வியும் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக கேரள அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி திருநங்கைகள் படிப்பதற்கு ஏதுவாக அனைத்து கல்லூரிகளிலும் உள்ள அனைத்து படிப்புகளில் அவர்களுக்காக கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இந்த சுற்றறிக்கை பதிவு செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் திருநங்கைகள் மீதான பார்வை நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் அவர்களும் கால் பதிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் கேரள அரசின் இந்த முடிவு திருநங்கைகள் சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close