[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை

minor-boy-stripped-hung-upside-down

உத்தரப் பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாகக் கூறி 14 வயது சிறுவன் ஒருவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரோசாபாத்தில் இருக்கும் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கி ஒன்றின் உரிமையாளர், அந்த சிறுவனை முதலில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று அவர் இரும்பு குழாய்களை திருடியதாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஆதாரம் இல்லாததால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுவனை தனது கிடங்கிற்கு அழைத்துச் சென்று அவனை நிர்வாணப்படுத்தி தலைகீழாக தொங்கவிட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது. இந்த கொடூர செயலை அந்த கிடங்கின் தொழிலாளர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கிடங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close