[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

பாலுக்கும், சொகுசு காருக்கும் ஒரே வரி விதிக்க முடியுமா ? பிரதமர் கேள்வி

pm-rules-out-single-rate-under-gst-says-mercedes-and-milk-cannot-have-same-tax

பாலுக்கும் சொகுசு காருக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என காங்கிரஸ் கட்சி‌‌க்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் சுவராஜ்யா இதழுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, ஜி.எ‌ஸ்.டி. அமலான ஓராண்டுக்குள் மறைமுக வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 70 விழுக்காடு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாது 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மாநில எல்லைகளில் வணிகவரிச் சோதனைச்சாவடிகள் ஒழிக்கப்பட்டு நேரமும் பணமும் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

ஒரே வரிவிதிப்பு முறையால் பல பொருட்களின் விலை குறைந்துள்ளதாக கூறியுள்ள அவர், 150 பொருட்களுக்கு வரியே விதிக்கப்படவில்லை‌ என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருக்க வேண்டும் எனக் கூறிவருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மக்களின் அத்தியாவசியத் தேவையான பாலுக்கும், செல்வந்தர்கள் பயன்படுத்தும் பென்ஸ் காருக்கும் ஒரே விதமாக வரி விதிக்க முடியுமா? எனவும் வினவியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close