[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

இதற்காகத்தான் பெண்கள் பிறந்தோமா? - கொந்தளித்த மிதாலி ராஜ்

mithali-raj-condemned-for-madhya-pradesh-child-harassment

மத்தியப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜூன் 26-ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. குழந்தையை காணாமல் பரிதவித்த பெற்றோர்கள், பல இடங்களில் தேடினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, முட்புதர் ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை காவலர்கள் கண்டுபிடித்தனர். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது. உடனே மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக கழுத்தை அறுத்த கொடூரன் இர்பான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தினக் கூலியாக பணியாற்றி வந்த இர்பானை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமி தற்போது ஆபத்தான நிலையை கடந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை சாகும் வரையில் தூக்கிலிட வேண்டும் என மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மத்தியப் பிரதேச சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மிதாலி ராஜ், “நாள்தோறும் ஒரு குழந்தை, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை பார்க்கும்போது வலிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் பிறந்தோமா? இதற்காகத்தான் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறோமா? இது தான் வளர்ச்சியடைந்த ஆண்-பெண் விகிதாச்சாரமா?” என கேள்விகளை எழுப்பி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close