[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்கள் : முதல் 5 இடத்திற்குள் ராமநாதபுரம்

gujarat-s-dahod-top-on-niti-aayog-delta-ranking

இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே வரை வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களில் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த மார்ச் முதல் மே வரை வளர்ச்சியடைந்த டெல்டா மாவட்டங்களில் பட்டியலை நிதி ஆயாக் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியல் சுகாதாரம், கல்வி, வளர்ச்சி மட்டுமின்றி, பொருளாதார சந்தையின் வளர்ச்சியின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தை வளர்ச்சியின் படி எடுக்கப்பட்ட பட்டயலில் முதல் 5 இடத்திற்குள் தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து இடங்களில் மேற்கு சிக்கிம் (சிக்கிம்), ராமநாதபுரம் (தமிழ்நாடு), விஜயநகரம் (ஆந்திரா), கடப்பா (ஆந்திரா) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய டெல்டா மாவட்டங்களில் குப்வாரா (ஜம்மூ-காஷ்மீர்), பெகுசராய் (பீகார்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), சிம்தேகா (ஜார்க்கண்ட்), காஹாடியா (பீகார்) ஆகியவை இடம்பிடித்துள்ளன. 

இதுதொடர்பாக நிதி ஆயோக் செயல் அதிகாரி அமிதாப் கந்த் கூறும்போது, “டெல்டா மாவட்டங்களில் பின் தங்கிய மாவட்டங்களை விரைவில் வளர்ச்சியடையச் செய்ய இந்தக் கணக்கீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். இதில் விரும்பிய இணைந்த மாவட்டங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்கள் பங்கேற்கவில்லை, சில மாவட்டங்கள் தாமதமாக பங்கேற்றன” என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close