[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் குவிந்த திரை நட்சத்திரங்கள் 

akash-ambani-shloka-mehta-s-starry-pre-engagement-party

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகேஷ் மற்றும் நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ரஸ்ஸல் மேத்தாவின் மகளான ஷ்லோகாவுக்கும் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அவரது மனைவி கவுரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், முன்னாள் கிரிக்கெட் வீ‌ரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

காதலர் நிக்கியுடன் வந்திருந்த பிரியங்கா சோப்ரா அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆகாஷ் மற்றும் ஷ்லோகாவின் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன் ஆகாஷுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close