பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகேஷ் மற்றும் நீடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ரஸ்ஸல் மேத்தாவின் மகளான ஷ்லோகாவுக்கும் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், அவரது மனைவி கவுரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காதலர் நிக்கியுடன் வந்திருந்த பிரியங்கா சோப்ரா அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆகாஷ் மற்றும் ஷ்லோகாவின் திருமணம் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன் ஆகாஷுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண்
“கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்...” - சிவசேனா-பாஜக இடையே வார்த்தைப் போர்
மசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்
“தேமுதிகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை” - ஸ்டாலின்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே? - நெட்டிசன்கள் கேள்விகள்