[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லி கொலை: ராணுவ மேஜர் ஃபோனில் ஆபாச வீடியோ! கத்தி, எரிக்கப்பட்ட உடை சிக்கியது!

police-recovers-knife-used-by-major-handa-to-slit-army-officer-s-wife-throat

ராணுவ அதிகாரி மனைவியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ மேஜர் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் எரிக்கப்பட்ட உடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கடந்த சனிக்கிழமை பிணமாகக் கிடந் தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அந்தப் பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும் இருந்தது. இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என்று டெல் லியின் மேற்கு பதியில் வசிக்கும் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி போலீசில் புகார் அளித்தர். அப்போது சாலையில் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்ணை அவரிடம் காட்டி விசாரித்தனர். அது தனது மனைவி சைலஜாதான் என்றார் அமித்.

போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அமித்தின் நண்பரும் மற்றொரு ராணுவ அதிகாரியுமான நிகில் ராய் ஹண்டா மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் அவரை மீரட் நகரில் கைது செய்தனர். 

ராணுவ அதிகாரி அமித் 2015-ம் ஆண்டு நாகலாந்தில் பணியாற்றிய போது, ஹண்டாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் மனைவி சைலஜா மீது ஆசை கொண்டார், ஹண்டா. இதற்கிடையில் அமித் டிரான்ஸ்பரில் டெல்லிக்கு வந்தார். பிறகும் சைலஜாவுடன் நட்பைத் தொடர்ந்துள்ளார். இந்த மாதம் 4-ம் தேதி டெல்லி வந்துள்ளார் ஹண்டா. வயிற்றுப் பிரச்னை காரணமாக அவதிப்படும் அவர் மகனை டெல்லி பேஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அதே மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார் சைலஜா. ஹண் டாவுக்கு சைலஜாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

சம்பவத்தன்று மருத்துவமனை வந்த சைலஜாவை காரில் ஏற்றியிருக்கிறார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சுற்றியுள்ள னர். அப்போது திருமணம் பற்றி வற்புறுத்தியிருக்கிறார் ஹண்டா. மறுத்தார் சைலஜா. டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷ ன் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. திடீரென்று கத்தியால் சைலஜாவின் கழுத்தை அறுத்தார். இதை எதிர் பார்க்காத அவர், காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், காரை வேகமாக இயக்கி அவர் மீது மூன்று முறை ஏற்றிக் கொன்று விட் டு தப்பி னார் ஹண்டா. 

இந்நிலையில் ஷைலஜாவைக் கொல்ல ஹண்டா பயன்படுத்திய கத்தி பற்றி தவறான தகவலைத் தெரிவித்து வருகிறார். அதோடு போலீஸை குழப்ப பொய்யான தகவல்களையும் கூறிவந்தார். புதன்கிழமை சம்பவம் நடத்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று கொலைக்குப் பயன்ப டுத்திய கத்தி பற்றி விசாரித்தனர். இங்குதான் வீசினேன் என்று கூறியிருந்தார் ஹண்டா. ஐந்து மணி நேரம் தேடியும் கத்தியை காணவில்லை.  

இந்நிலையில் மீரட்- முஸாபர்நகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் ஷைலஜாவின் கழுத்தை அறுக்க, பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சாலையில் சில இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, அந்த நெடுஞ் சாலையில் இருந்து, ஓர் இடத்தில் ஹண்டாவின் கார் விலகி வேறு பாதைக்குச் சென்றுள்ளது. அந்த இடத்தில் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஷைலஜாவின் கழுத்தை அறுக்கப்பயன்படுத்தப் பட்ட கத்திக் கைப்பற்றப்பட்டது. அதன் அருகில் ரத்தம் தெறித்த தனது சட்டையையும் பேண்ட்டையும் எரித்துள்ளார் ஹண்டா. அதையும் கைப்பற்றிய போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ள னர். 

’ஹண்டாவின் ஃபோன்களில் ஏராளமான ஆபாச பட வீடியோ இருந்தது. ஷைலஜாவுடன் சாட் செய்த ரெக்கார்டை அழித்துள்ளார். ஷைலஜாவி ன் போனையும் உடைத்துள்ளார். அதை போனை கைப்பற்றியுள்ளோம். அதையும் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close