[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

ஈரானுக்கு “ டாட்டா”  மாற்று வழி தேடும் இந்தியா !

india-asks-refiners-to-mull-alternatives-as-it-seeks-to-cut-iranian-oil-imports

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வரும் நிலையில், ஈரானிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிகளை ஆராயுமாறு எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்திய நிறுவனங்கள் முயற்சிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் நெருக்கடி குறித்து இந்தியா பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தியா தென் அமெரிக்காவிலிருந்து புருனே வரை பல நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் சார்ந்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விவகாரத்தில் இந்தியாவின் தேசிய நலன்களை விட்டுத்தர மாட்டோம் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா கடந்த மாதம் முறித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மீறி ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close