[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சர்ஜிகல் ஸ்டிரைக் ! பாகிஸ்தான் மறுப்புக்கு வீடியோவை வெளியிட்டது இந்தியா 

surgical-strikes-videos-show-destruction-of-terror-camps-and-deaths

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள், திடீரென தாக்குதல் ந‌டத்தியதில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சிறப்பு படை வீரர்‌கள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்துவிட்டு, வெற்றிகரமாக திரும்பியதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்தது. எல்லை தாண்டி வந்து‌ தனது மண்ணில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தது. 

இந்நிலையில், துல்லியத் தாக்குதல் நடந்து ‌636 நாட்களுக்குப் பின் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய காணொலியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. துருவ் ஹெலிகாப்டர் மூலம் சென்று, பாரசூட் மூலம் குதித்த சிறப்புப் படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 4 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளது. வீரர்களின் தலைகவசத்தில் இருந்த கேமரா மூலம் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ‌இந்த தாக்குதலை டெல்லியில் இருந்தபடி அப்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் நேரடியாக கண்காணித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close