[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

மொபைல் இருந்தால் போதும்..! இனி ஈஸியாக பாஸ்போர்ட் பெறலாம்..!

sushma-swaraj-introduces-passport-seva-app

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பாஸ்போர்ட் சேவா என்ற புதிய செயலியை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிமுகம் செய்துள்ளார்.

ஒருவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் பாஸ்போர்ட் பெறுதல் அவசியம். வேலை விஷயமாகவும், சுற்றுலாவிற்கும் பல பேர் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம்தான். ஆனால் இதற்காக அவர்கள் பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால் நிறைய அலைச்சல் உள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் பதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பெறும் வகையிலும், மொபைல் போன் மூல‌ம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும் வகையிலும், ‘பாஸ்போர்ட் சேவா’  என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பாஸ்போர்ட் போன்றவை செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விவாகரத்தான பெண்களோ/ ஆண்களோ பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது திருமணச் சான்றிதழ் மற்றும் முன்னாள் கணவரின் பெயரை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிவிப்பையும் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் பாஸ்போர்ட் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்த சுஷ்மா ஸ்‌வராஜ், தற்போது நாடு முழுவதும் 251 பாஸ்போர்ட் பதிவு மையங்களை திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதில் 212 மையங்கள் நிறுவப்பட்டு விட்டதாகவும், எதிர்காலத்தில் அனைத்து மக்களவை தொகுதியிலும் பாஸ்போர்ட் பதிவு மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒருவர் பாஸ்போர்ட் வேண்டி, லக்னோவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டில் சிக்கல் உள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறியிருந்தார். மேலும், மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஸ்போர்ட் பெறுவது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close