[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

நிறத்தை குறை கூறுவதா? கணவர் குடும்பத்தை கொல்ல விஷம்: இளம் மனைவி கைது!

woman-held-for-poisoning-dal-at-fatal-feast-says-in-laws-tortured-her-over-complexion

கருப்பாக இருப்பதாக திட்டிய கணவரையும் மாமியாரையும் கொல்ல, உணவில் விஷம் கலந்த இளம் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். உணவில் கலந்த விஷம் காரணமாக 5 பேர் பலியாயினர். 84 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மும்பையில் இருந்து 70 கி.மீ தூரத்தில், ராய்காட் மாவட்டத்தில் உள்ளது கலாப்பூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுரேஷ் கோவிந்த் சுர்வாஸ். இவருக்கு பிரண்யா (23) என்ற பெண்ணுக்கும் 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. பிரண்யா கருப்பாக இருப்பதால் அவரை கணவரும் அவர் வீட்டாரும் அடிக்கடி அதைச் சொல்லியே திட்டிக்கொண்டு இருப்பார்களாம். சரியாக சமைக்கவில்லை என்றும் குறை கூறியுள்ளனர். கணவரின் சகோதரியில் இருந்து உறவினர் சுபாஷ் மானே வரை அனைவரும் தினமும் இதை வேலையாகவே செய்து வந்துள்ளனர். இதனால் மனம் நொந்து போன பிரண்யா, தனது வேதனையை மனதுக்குள் பூட்டி வைத்திருந்தார். 

இந்நிலையில் கணவரின் உறவினர் சுபாஷ் மானே மஹாட் பகுதியில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினார். கடந்த திங்கள்கிழமை விழா. இதற்காக 120 பேருக்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார், மானே. விழா முடிந்து மதியம் சாப்பாடு போடப்பட்டது. அதைச் சாப்பிட்ட பலருக்குத் திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. சிலர் மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்ட 88 பேர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாயினர்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், உணவில்தான் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் உணவு தயாரிப்பில் யார் யார் ஈடுபட்டார்கள் என்று விசாரித்தனர். அப்போது, சிக்கினார் பிரண்யா.

அவரிடம் விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன்னை கேவலமாக பேசிய கணவர், மாமியாரை கொல்ல உணவில் விஷம் கலந் தேன். பாம்புகளை கொல்லப் பயன்படுத்தும் மருந்தை பருப்பில் கலந்தேன்’ என்று போலீஸிடம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close