[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

மகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்

depressed-over-daughters-death-3-of-family-commit-suicide-in-mumbai-cuffe-parade

மும்பை நகரில் மகள் உயிரிழந்த சோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை குஃப்பே பாரட் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் பட்டேல்(40). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவர் வாடகை வீட்டில் 4 வருடங்களாக வசித்து வந்துள்ளார். மும்பையில் உள்ள தனது வீட்டில், பிரவீன் தனது மனைவி வீணா பட்டேல்(35), மகன் பிரபு பாட்டேல் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இரண்டு நாட்களுக்கு மேலாக பிரவீன் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, பிரவீன், அவரது மனைவி, மகன் ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், “இரண்டு நாட்களாக கதவு திறக்கப்படாததால், வீட்டின் உரிமையாளருக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். நாங்கள் வீட்டின் கதவை தட்டினோம். வீட்டிற்குள் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், காவல்துறைக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம்” என்றார். 

                    

உடனடியாக பிரவீன் வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள்ளே சென்றார்கள். பிரவீன் குடும்பத்தில் உள்ள மூன்று பேரும் தூக்கிட்ட நிலையில் இருந்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி மனோஜ் சர்மா கூறுகையில், “தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றினை கைப்பற்றியுள்ளோம். அதில், கேன்சர் நோய் பாதிப்பால் தன்னுடைய இளைய மகள் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்தோம் என அதில் எழுதப்பட்டிருந்தது” என்றார்.

மூன்று பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே எப்படி இறந்தார்கள் என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close