[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

இந்து-முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் புறக்கணிப்பா? - நடந்தது என்ன?

a-passport-office-official-in-lucknow-who-insulted-an-interfaith-couple-was-today-transferred-to-another-location

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகமது அனஸ் சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர்கள் நொய்டாவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தம்பதியினர் பாஸ்போர்ட் வேண்டி லக்னோவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விணப்பித்தனர்.

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக நேற்று லக்னோவிலுள்ள அலுவலகத்திற்கு தன்வி சென்றுள்ளார். அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட்டில் சிக்கல் உள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறியிருக்கிறார். மேலும், மிகவும் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது. 

                           

இதுகுறித்து தன்வி கூறுகையில், “முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் என்னுடைய ஆவணங்களில் சிக்கல் உள்ளதாக அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறினார். இன்னும் என்னுடைய பெயரை மட்டுமே வைத்துள்ளார். கணவர் பெயரை சேர்க்கவில்லை. எல்லோர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினார். சத்தமாக திட்டினார். கூடுதல் பாஸ்போர்ட் அதிகாரியிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் கோமதி நகரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தபோதும், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்று கூறினார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தன்வி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். தன்வி தனது ட்விட்டர் பதிவுகளில், “ஆதங்கத்துடன் இதை பதிவிடுகிறேன். கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது, 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்ட போது நான் என்னுடைய பெயரை எங்கேயும் மாற்றவில்லை.

                                                               

திருமணம் ஆன பின்னர் தன்னுடைய பெயருக்கு பின்னால் கணவர் பெயரை இணைத்துக் கொள்வது பெண்களின் கடமை. ஆனால், பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றால் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று அதிகாரி விகாஸ் என்னுடைய கணவர் சித்திக்கிடம் கூறினார்” என தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகளை எல்லாம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தன்வி டேக் செய்துள்ளார். அதேபோல், இமெயில் மூலமும் அனுப்பியுள்ளார். இதனால், இந்தப் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

                                                     

            

இன்று காலை முதல் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இந்த விவகாரத்தில் சுஸ்மா சுவராஜ் தலையிட்டதை அடுத்து அந்தத் தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், இந்து-முஸ்லிம் தம்பதியினரை அவமானப்படுத்தியதாக கூறப்படும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்திடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. அதேபோல், அதிகாரி விகாஸ் மிஸ்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

                                    

“இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்கிறோம்” என்று லக்னோ மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். இருப்பினும், சட்ட விதிகளின் படியே நடவடிக்கை மேற்கொண்டதாக பாஸ்போர்ட் அதிகாரி மிஸ்ரா கூறியுள்ளார். அதேபோல், இந்து-முஸ்லிம் தம்பதியிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும் மதம் குறித்து தவறான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். போலி பாஸ்போர்ட்களை தடுப்பதற்காகவே இவ்வறு விதிகளை கடுமையான முறையில் கடைபிடிப்பதாக அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close