[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..!

karnataka-cop-rescues-and-adopts-electrocuted-monkey-wins-hearts

கர்நாடகாவை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது குழந்தையை போல் குரங்கு ஒன்றிடம் பாசத்துடன் பழகி வருகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் யசோதா. இவர் அங்குள்ள எல்லம்மா கோயிலுக்கு ஒருநாள் சென்றிருக்கிறார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் கூட்டம். என்னாச்சு என மக்களை கூட்டத்தை பிளந்துகொண்டு உள்ளே சென்று யசோதா பார்த்துள்ளார். அங்கு குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி கிடந்துள்ளது. அத்துடன் குரங்கின் கண்களில் இருந்தும் ரத்தம் வழிந்துள்ளது. உடனே பதறிப்போன யசோதா குரங்கு பக்கத்தில் ஓடியிருக்கிறார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுவரை எந்த உதவியும் செல்லவில்லை. காப்பாற்ற சென்ற யசோதாவையும் குரங்கு கடித்து குதறிவிடும் என பயம் காட்டியிருக்கின்றனர். ஆனால் துணிந்து சென்று குரங்கை தூக்கிய யசோதா அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். முதலில் ஆபத்தான நிலையில் இருந்த அந்தக் குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நலமுடன் உள்ளது.

தற்போது யசோதா வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வரும் அந்தக் குரங்கு அவருக்கு நல்ல நண்பராகவும், குழந்தையாகவும் மாறிவிட்டதாக அவரே மன மகிழ்ச்சியில் பூரிக்கிறார். மேலும் குரங்கு வசிக்க வீட்டில் அதற்கேற்றாற் போல் ஒரு இடமும் அமைத்து கொடுத்துள்ள யசோதா அதனை குழந்தையாகவே நினைத்து கொஞ்சுகிறார். குரங்கும் யசோதாவிடம் பாசமாகவே பழகுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. யசோதாவின் பாச உணர்வை சமூக வலைத்தளவாசிகளும் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close