[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...!

punjab-woman-comes-to-madhya-pradesh-to-meet-her-hero-ips-officer

ஐபிஎஸ் அதிகாரியின் மிடுக்கான நடை மற்றும் அவரது அழகால் ஈர்க்கப்பட்ட பெண் ஒருவர் அவரை காண்பதற்காக பஞ்சாப்பிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

நடிகர்கள், கிரிக்கெட் ஸ்டார்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருப்பதை பார்த்திருப்போம். இது அவர்களுக்கு ஒருவிதமான பலம் என்றாலும் பொது இடங்களில் அவர்கள் வந்தால் ரசிகர்கள் கூட்டம் அவர்களை மொய்க்கும். இதனால் அவர்கள் சற்று சிரமத்தை உணரலாம். ஆனால் இங்கே ஐபிஎஸ் அதிகாரிக்கு தீவிர ரசிகை ஒருவர் இருக்கிறார். இதனால் அவரை நேரில் காண்பதற்காக பஞ்சாப் மாநிலத்திலிருந்து மத்தியப் பிரதேசம் வரை சென்றுள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சச்சின் அதுல்கர். வயது 34. தற்போது மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மிடுக்கான நடை, பொலிவான தோற்றம் என கட்டுக்கோப்பான உடல்வாகினை கொண்டவர். இவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் கண்ட பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர் இவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசையில் மத்தியப் பிரதேசத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள போலீசாரிடம் சென்று தனது ஆசையை தெரிவிக்க, அவர்கள் எஸ்.பி.யை தற்போது பார்க்க முடியாது என சொல்லியிருக்கின்றனர். மேலும் அப்பெண்ணை ஆசுவாசப்படுத்தி திருப்பி அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால் என்ன சொன்னாலும் அப்பெண் கேட்கவில்லை. பிடித்த பிடியாக எனது ஹீரோவை சந்தித்துவிட்டுதான் செல்வேன் என சொல்லியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இப்பெண் விவரம் தெரியாத பெண் ஒன்றும் இல்லை. உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். போலீசார் அப்பெண்ணை ரயிலில் ஏற்றி வைக்க முயற்சித்த போது ரயிலில் இருந்து குதித்து விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவர்கள் மூலம் அப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய சச்சின் அதுல்கர், அலுவலக வேலை விஷயமாக யார் என்னை சந்திக்க முயற்சித்தாலும் உடனே அவர்களை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை இவர்களை சென்று சந்தியுங்கள் என யாரும் நிர்பந்திக்க முடியாது என காட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் பேசிய அவர், சாகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, 7 வயது குழந்தையின் பெற்றோர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். நான் ஆட்டோகிராப் போட்டால்தான் அவர்கள் மகன் முறையாக சாப்பிடுவேன் என அடம்பிடிப்பதாக கூறினர். அப்போது சிறுவனுக்கான நான் அதனை நிறைவேற்றிக் கொடுத்தேன் என்றார்.

சச்சின் அதுல்கருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாள்தோறும் உடற்பயிற்சி செய்து நாளுக்கு நாள் தனது உடலை கட்டுக்கோப்பாக்கி வருகிறார். தினசரி 70 நிமிடங்கள் இதற்காகவே அவர் ஜிம்மில் தனது நேரத்தை செலவிடுகிறார். அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாடு போபாலில் நடைபெற்றது. இதில் உடல் ஃபிட்னஸ் தொடர்பான பல விருதுகளை சச்னின் அதுல்கர் அள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close