[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

“இஸ்லாமிய ஊழியரா? வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு

a-woman-who-pooja-singh-said-i-don-t-believe-muslim-employees

பூஜா சிங் என்ற பெண் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் தான் ஏர்டெல் டீடிஎச்-ஐ மறுஇணைப்பு செய்வதற்காக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். அதற்காக ஏர்டெல் சார்பில் இருந்து நியமிக்கப்பட்ட சேவை பொறியாளர் தன்னிடம் தொலைபேசியில் பேசும்போது தவறாக பேசியதாகவும், இனிமேல் எனக்கு கூப்டவே கூடாது என்று தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் அந்த சேவை பொறியாளர் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து, வாடிக்கையாளரின் பணத்தை கொள்ளையடிப்பதே ஏர்டெல்லின் பணி போல என புகார்களை அடுக்கினார்.  

பூஜாவின் இந்த புகார் ட்வீட்டை பார்த்ததும், ஏர்டெல் நிறுவனம் ஊழியர் ஒருவர் உடனடியாக அதற்கு பதிலளித்தார். அந்த பதிலில், ”உடனடியாக இது போன்ற விஷயத்தை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி;  இதுதொடர்பாக நாங்கள் கூர்ந்து கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். நன்றி , ஷோயஃப்” என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பூஜா, “ஷோயப் நீங்கள் ஒரு முஸ்லீம். எனக்கு உங்கள் பணி நேர்மை மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் குரானில் வாடிக்கையாளர் சேவை குறித்து பல முறைகள் உள்ளது. எனவே நீங்கள் ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், பூஜா உங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டும் எனக்கூறுங்கள் நாங்கள் சிறந்த முறையில் உங்கள் கோரிக்கை செய்து தருகிறோம். உங்களின் தொலைபேசி எண்ணை பகிருங்கள், அதில் உங்களுக்கு தகவல்களை வழங்குகிறோம். நன்றி” இப்படிக்கு ககன்ஜோத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பூஜா கோரிக்கைப்படி இஸ்லாமிய ஊழியரை மாற்றி, இந்து ஊழியரை ஏர்டெல் நியமித்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தற்போது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண்ணையும், ஏர்டெல் நிறுவனத்தையும் கேள்விகள் எழுப்பி, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

குறிப்பாக தனது ஊழியரை சிறுமைப்படுத்திய வாடிக்கையாளரை கண்டிக்காமல் ஏர்டெல் ஆளை மாற்றியது சரியா ? என கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், இது போன்ற சமயத்தில் ஏர்டெல் அந்த வாடிக்கையாளருக்கு சேவையை நிறுத்தி அனுப்பியிருக்க வேண்டும் என்றும் மத ரீதியில் ஒரு நிறுவன ஊழியரை சிறுமைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள் என பலரும் அந்த ட்வீட்டின் கீழே தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close