[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இணைந்து போட்டி
  • BREAKING-NEWS இடைக்கால உபரித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிய நிலையில், மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக ரூ.28,000 கோடியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
  • BREAKING-NEWS ஆளுநர்-முதலமைச்சர் இடையேயான பிரச்னையை தீர்த்து புதுச்சேரியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடிதம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் - ராஜீவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்)
  • BREAKING-NEWS கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!

தலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி!

gang-war-in-north-delhi-s-burari-three-dead-five-injured

டெல்லியில் தாதா கும்பல்கள் துப்பாக்கியால் மோதிக்கொண்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லியில் தாதாக்கள் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருகி ன்றன. சமீபத்தில் தாதா ராஜேஷ் பார்தி உட்பட 4 ரவுடிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே டெல்லியில் தாதா க்களுக்கிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. நான் பெரியவனா, நீ பெரியவனா என்கிற போட்டியில் அவர்களாகவே தாக்கிக் கொள் கின்றனர். இந்நிலையில் இரண்டு தாதா கும்பல்கள் பொதுமக்கள் முன்பே, சினிமாவில் நடப்பது போல சரமாரி சுட்டுக்கொண்ட சம்பவம் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில் இன்று காலை 10.15 மணி அளவில் ஸ்கார்பியோர் கார் ஒன்றில் ஒரு கும்பல் ஏறிக்கொண் டிருந்தது. அதைக் கண்டதும் ஃபார்ச்சுனர் காரில் இருந்த ரவுடிக் கும்பல் சரமாரியாகச் சுட்டது. ஸ்கார்பியோ காரில் இருந்தவர்களும் சரமாரி யாகத் திருப்பிச்சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் அலறி யடித்து ஓடினர். சிறிது நேரத்தில் துப்பாக்கியால் மோதிக்கொண்ட கார்கள் சீறி பறந்துவிட்டன. 

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், வாலிபர் உட்பட மூன்று பேர் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ‘இங்கு இரண்டு தாதா குரூப் இருக்கிறது. ஒன்று கோகி மற்றொன்று தில்லு. இந்தக் கோஷ்டி கள்தான் இன்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சினிமாவில் பார்ப்பது போல இருந்தது. பலர் அலறியடித்தபடி ஓடினர்’ என்றனர். மற்றொ ருவர் கூறும்போது, ‘ ஸ்கார்பியோவில் வந்தவர்கள் இங்குள்ள ஜிம்முக்கு தினமும் வருவது வழக்கம். அதை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வரும்போது ஃபார்ச்சுனர் காரில் இந்தவர்கள் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்’ என்றனர். 

போலீசார் கூறும்போது, ‘சுமார் 10 ரவுண்ட் வரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆணும் பெண்ணும் யார் என்பது தெரிய வந்திருக்கிறது. மற்றொருவர் அடையாளம் தெரியவிலை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close