[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய மாநில ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்

"விளையாட்டு வினையான விபரீதம்" தாயை பதம்பார்த்த தோட்டாக்கள்

girl-accidentally-shoots-mother-after-mistaking-revolver-for-a-toy

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமி விளையாட்டாக சுட்டதில் தாய் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்,  மேற்கு வங்க மாநிலம் கானாகுல் (Khanakul) பகுதியை சேர்ந்தவர் காகோலி ஜனா (Kakoli Jana). இவர் தனது தோட்டத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை கண்டெடுத்துள்ளார். விளையாட்டு துப்பாக்கி என நினைத்து தனது மகளிடம் அதனை கொடுத்துள்ளார். சிறுமி விளையாட்டாக சுட்டதில் அதில் இருந்த தோட்டாக்கள் பாய்ந்து தாயை பதம் பார்த்தது. இதில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்தினால் அந்த சிறுமி அதிர்ச்சியில் உள்ளதாகவும். தற்போது அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்வில்லை என தெரிவித்தனர்.
 
அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். ஏனென்றால் அங்கு கடைகளிலே துப்பாக்கிகளை வாங்கலாம். பெரிய அளவில் கட்டுப்பாடுகல் ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது. துப்பாக்கி தோட்டத்திற்கு வந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close