[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இரட்டை இலக்க வளர்ச்சியே அரசின் இலக்கு: பிரதமர் மோடி

will-take-growth-rate-of-india-to-double-digits-narendra-modi

 

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு உயர்த்துவதே அரசின் முன்பாக இப்போதுள்ள சவால் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, 7.7 சதவிகிதமாக இப்போதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கமாக உயர்த்துவதே அரசின் முன்பாக உள்ள சவால் என்று தெரிவித்தார். அதை உறுதி செய்ய மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் பிரதமர் கூறினார். வளங்கள் மற்றும் மனிதத் திறமைக்கு நம்நாட்டில் பஞ்சமே இல்லை என்று தெரிவித்த அவர், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தினால் உலகமே பிரமிக்கத்தக்க நிலையை இந்தியா எட்ட முடியும் என்றும் தெரிவித்தார். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறிய மோடி, மத்திய அரசிடம் இருந்து நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை உதவியைப் பெறுவதாகவும் கூறினார். இது முந்தைய ஆட்சியின் கடைசி ஆண்டில் வழங்கப்பட்டதைவிட சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அதிகம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close