[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

டெல்லியில் முதல்வர் பழனிசாமி: பிரதமர் தலைமையில் கூட்டம்..!

niti-aayog-meeting-today

டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டம், தேசிய சத்துணவு திட்டம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய இந்தியா 2022ற்கான வளர்ச்சி திட்டமும் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தம்பிதுரை தலைமையிலான அதிமுக எம்பிக்கள் முதல்வர் பழனிசாமியை வரவேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close