[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மின்னல் வேகத்தில் 'டைப்' அடிக்கும் 72 வயது மூதாட்டி: அசந்துபோன சேவாக்..!

72-year-old-still-teaches-typing-with-enthusiasm

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மகளின் மருத்துவச் செலவுக்காக தட்டச்சுப் பணி செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிஹோரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பாய். 72 வயது  மூதாட்டி. இவர் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தட்டச்சு செய்து ஆவணங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார். தட்டச்சு செய்வதையும் குறைந்த வேகத்தில் அவர் செய்வதில்லை. மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்கிறார். இதனால் அவரிடம் தட்டச்சு செய்வதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர். வயதினை அவர் பொருட்டாக நினைக்கவில்லை. மனதில் ஊக்கத்தை வைத்து தன் கைகள் வழியாக அவர் தனது திறமையை காண்பிக்கிறார்.

விபத்தில் கால்களை இழந்த தனது மகளின் மருத்துவ செலவுக்கு கடன் பெற்றுள்ளார் லட்சுமி பாய். இதை திரும்ப அளிக்க வயதான காலத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். அண்மையில், இவர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தமது ட்விட்டர் பக்கத்தில் ‘சூப்பர் உமன்’(SUPER WOMAN) என பாராட்டி வர்ணித்திருந்தார். தனது கடனை அடைக்க பண உதவியும் நிரந்தர வீடும் தேவைப்படுவதாக லட்சுமி பாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close