[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

"வன்முறைக்கு பதிலடி வளர்ச்சி" - பிரதமர் மோடி

narendra-modi-to-unveil-multiple-projects-in-chhattisgarh

நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி வன்முறைக்கு ஒரே பதில் வளர்ச்சிதான் என கூறியுள்ளார்.

சந்தீஸ்கர் மாநிலத்தின் பிலாயில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நயா ராய்பூரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பிலாயில் நவீன தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை திறந்து வைத்த பிரதமர், ஐஐடியின் நிரந்தர வளாகம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் ஜகதால்பூர் மற்றும் ராய்ப்பூர் இடையிலான விமான சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் நாட்டை நிலம், நீர் மற்றும் காற்று மார்க்கமாக இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர், எந்த வகையான வன்முறைக்கும், சதித் திட்டங்களுக்கும் வளர்ச்சிதான் மிகச் சரியான பதிலாக இருக்கும் என குறிப்பிட்டார். வளர்ச்சி மூலம் ஏற்படுத்தப்படும் நம்பிக்கைக்கு எந்த வன்முறையையும் இல்லாமல் செய்யும் ஆற்றல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியின் மூலம் நம்பிக்கையான சூழலை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருவதாக மோடி சுட்டிக்காட்சினார். வளர்ச்சி கிடைப்பதற்கு. அமைதி, சுமூகமான சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை வசதிகள் தேவை என அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close